எத்தனை எதிரிகள் வந்தாலும் தொண்டர்கள் துணையுடன் கழகத்தை காப்பேன் என்றும், தொண்டர்களின் முழு ஆதரவுடன் அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்று சட்டப்பேரவையில் அம்மாவின் திருவுருவப் படத்தை திறந்து வைப்போம் என போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடையே கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று குவிந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா உரையாற்றினார். இதனையடுத்து, இல்லத்தின் வெளியே சாலை முழுவதும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற வந்த சின்னம்மாவை வாழ்த்து முழக்கமிட்டும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கழக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் உடைந்த கழகத்தை ஒன்று சேர்க்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் அம்மாவின் நிழலாக இருந்து தாம் செயலாற்றியுள்ளதாகவும், 33 ஆண்டுகளாக பல சலசலப்புகளையும், சோதனைகளையும் கடந்தே தாம் வெற்றி கொண்டுள்ளதாகவும் தொண்டர்கள் மத்தியில் சின்னம்மா பேருரையாற்றினார். தொண்டர்களின் துணையுடன் அம்மாவின் அரசை அமைத்து அழகு பார்ப்போம் என்றும் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.

No comments:
Post a Comment