Friday, 10 February 2017

அ.இ.அ.தி.மு..க. அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து மதுசூதனன் நீக்கம் - கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவிப்பு - புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையன் நியமனம்

கழகத்தின் கொள்கைக் குறிக்கோள்களுக்கு, முரணான வகையில் செயல்பட்டதால் அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அப்பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்படுவதாக, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அவைத் தலைவர் திரு.இ.மதுசூதனன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், கழக அவைத் தலைவர் பொறுப்பில் திரு.கே.ஏ.செங்கோட்டையன் இன்றுமுதல் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment